இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றியது ஈரான்: கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது கடந்த 1-ம்தேதி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில்ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற எம்எஸ்சி ஏரியஸ் என்ற சரக்கு கப்பல் ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்பகுதியில், ஈரான் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் வழியாக தரையிறங்கி கைப்பற்றினர். போர்ச்சுகீசு நாட்டைச் சேர்ந்த இந்தசரக்கு கப்பல், இஸ்ரேலுக்குகன்டெய்னர்களை கொண்டு சென்றது. அந்த கப்பல்தற்போது ஈரான் கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனி யல் ஹகாரி, ‘‘வளைகுடா பகுதியில் ஈரான் பதற்றத்தை அதிகரிப்பதால், கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE