ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், 4 காவலர்கள் பலியாகினர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீஸார் தரப்பில் கூறுகையில், ''ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். இவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 4 பேர் போலீஸ் அதிகாரிகள். 2 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் ராணுவத் தரப்பிலும் பதில் தாக்குதல் அளிக்கப்பட்டது. இதில் தலிபான்கள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும் அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago