ஒரே மாதிரியான லாட்டரிச் சீட்டு: அமெரிக்க தம்பதிக்கு ரூ.17 கோடி பரிசு

By செய்திப்பிரிவு

மேரிலாண்ட்: அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள அனபோலிஸ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பவர்பால் குலுக்கலில் பங்கேற்றுள்ளனர். அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான 2 லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கியுள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட குலுக்கலில், அந்த தம்பதிக்கு தலா ஒரு லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு என்ற வகையில் 2 மில்லியன் டாலர் (ரூ.17 கோடி) பரிசு கிடைத்துள்ளது. முதலில் கணவன் தான் வாங்கிய லாட்டரிக்குத்தான் பரிசு கிடைத்துள்ளதாக நினைத்தார். பின்னர், மனைவியிடமும் அதே எண்ணில் டிக்கெட் இருந்ததால் அந்த தம்பதிக்கு இரட்டை அதிர்ஷ்டம் அடித்து பரிசுத் தொகை இரட்டிப்பாகியுள்ளது.

தற்போது அந்த தம்பதி அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

லாட்டரி இணையதளத்தின் தகவலின்படி, ஜனவரி 1-ம் தேதியிலிருந்து இதுவரை பவர்பால் ஜாக்பாட் லாட்டரியில் யாருக்கும் பரிசு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தில் வசிக்கும் தம்பதிக்குத்தான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்