டோக்கியோ: ஜப்பானில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய - மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
2024 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளே ஜப்பான் மக்களுக்கு நிலநடுக்க அதிர்ச்சியுடன் தொடங்கியது. அந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். அப்போதே ஜப்பானில் இன்னும் சில நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) அன்று தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,“கடந்த 1999-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 2,400 பேர் உயிரிழந்தனர். அதுவே இந்த தீவு தேசத்தின் மிக மோசமான இயற்கை பேரிடராக உள்ளது. ரிக்டர் அளவில் 7.6 என அப்போது பதிவாகி இருந்தது. அதன்பிறகு புதன்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பம், ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
55 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago