தற்கொலைப்படை தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது சீனா

By செய்திப்பிரிவு

பெஷாவர்: பாகிஸ்தானில் 2 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர்.

இதில், 5 சீனப் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்தனர். எனவே அணைகட்டும் பணிகளை சீன நிறுவனம் நிறுத்திவிட்டது. இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்,“தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சீன ஒப்பந்த கட்டுமான நிறுவனம் 2 அணைகளின் கட்டமைப்பு பணிகளை நிறுத்திவைத்துள்ளது. 1,250 சீனர்கள் பணிபுரியும் இடங்களில் மீண்டும் வேலையை தொடங்குவதற்கு முன் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அயலக தொழிலாளர்களை குறிவைத்து தாக்குவது இரு நாடுகளுக்கு இடையில் கவலையை அதிகரித்துள்ளது. இதனால் புதிய பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் சீன நிறுவனம் கோரியுள்ளது.

தாசு அணைத் திட்டத்தில் சுமார் 750 சீன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, டயமர்பாஷா அணை கட்டுமானப் பணிகளில் 500 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து சீன பொறியாளர்கள் வசிக்கும் எல்லையை விட்டு வெகுதூரம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்