பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயரிய விருது: மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

பாரோ: பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சமீபத்தில் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, பூடான் வருமாறு மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி நேற்று பூடான் சென்றார்.

பாரோ விமான நிலையத்தில் அவரை பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். ‘‘எனது அண்ணன் நரேந்திர மோடி, பூடானுக்கு வருக’’ என்று இந்தியில் அவர் வரவேற்பு அளித்தார். பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு, மாணவிகள் கர்பா நடனம் ஆடி, அவரை வரவேற்றனர். பாரோ விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திம்பு வரை 45 கி.மீ. தூரத்துக்கு மக்கள் கொடிகளை அசைத்து மோடியை வரவேற்றனர்.

பின்னர், மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கை பிரதமர் மோடிசந்தித்தார். அப்போது, பூடானின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் த டிரக் கியோல்போ’ விருதை பிரதமர் மோடிக்கு, மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார். இது சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருதாகும்.

இதற்கு முன்பு பூடான் அரச குடும்பத்தை சேர்ந்த3 பேர் மற்றும் தலைமை மடாதிபதிக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்