அமெரிக்கா அணு ஆயுதங்களைக் கொண்டு வெட்கமின்றி ரஷ்யாவை அச்சுறுத்தி வருகிறது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தனது அணு ஆயுதக் கொள்கை தொடர்பான ஆவணத்தை சமீபத்தில் வெளியிட்டது.
அமெரிக்காவின் அணு ஆயுதக் கொள்கை மனித குலத்தை அழிவின் பாதைக்கு அருகே கொண்டு வரும் திட்டமாகவே உள்ளது என்று ஈரானும், இது ரஷ்யாவுக்கு எதிராக மோதலை உருவாக்கும் ஆவணமாக உள்ளது என்று ரஷ்யாவும் கருத்து தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுத ஆவணம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தொலைக்காட்சியில் கூறும்போது, "அமெரிக்கா வெட்கமில்லாமல் ரஷ்யாவை அணு ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களை கொல்வது குற்றம் என்று கூறும் இவர்கள் அதே ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளை மிரட்டுகிறார்கள்" என்றார்.
அமெரிக்காவின் இந்த அணு ஆயுதக் கொள்கையை சீனாவும் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுத சோதனைகளை செய்ததாகவும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும், ஈரான் அதிபர் ஹசனுக்கும் மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago