அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது.
இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் புளோரிடா மாநிலம், கேப் கேனவெரல் நகரில் உள்ள ஜான்கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மிகச் சக்தி வாய்ந்த, உலகிலேயே மிகப் பெரிய ராக்கெட்டை நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இதே பால்கான் ராக்கெட் மூலம்தான் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர்.
இன்று அதே பால்கான் ராக்கெட்டுக்கு போட்டியாக மிகச் சக்திவாய்ந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மெகா பால்கான் ராக்கெட்டின் உயரம் 229 அடி (70மீட்டர்) ஆகும். இதன் எடை 14 லட்சத்து 20 ஆயிரத்து 788 கிலோவாகும். இந்த ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக 27 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 2 பூஸ்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பூமிக்குள் வரும்போது, 63,800 கிலோ எடையும், செவ்வாய் கிரகத்துக்குள் செல்லும் 16,800 கிலோ எடையையும் சுமக்கும் திறன்படைத்து இந்த ராக்கெட் ஆகும்.
இந்த பால்கன் மெகா ராக்கெட் இந்திய நேரப்படி இரவு 1 மணிக்கு, (அமெரிக்க நேரப்படி மாலை 3.45 மணி) விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் விண்ணில் பாயும் போது, இதில் இருந்து வெளிப்பட்ட புகை, ஒரு மலை அளவுக்கு மிகப்பெரியதாக இருந்தது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராக்கெட் ஏவுவதைப் பார்ப்பதற்காக ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏவுதளத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் கோகோ கடற்கரையில் முகாமிட்டு இருந்தனர்.
இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள பூஸ்டர்கள் ராக்கெட்டை விண்ணில் பறக்கவைத்த பின் பூமிக்கு வந்தடையும். ஆனால், வந்தடைந்ததா என்பது குறித்து தெரியவில்லை. இந்த இரு பூஸ்டர்களும் ஏற்கெனவே வேறு ஒரு ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு அது மறுசுழற்ச்சி செய்யப்பட்டு இதில் பயன்படுத்தப்படுகிறது.
ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பறந்தவுடன், இந்த ராக்கெட்டின் கட்டுப்பாட்டு தளம் அமைந்துள்ள தெற்கு கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் கைதட்டியும், விசில் அடித்தும், குதித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்த ராக்கெட்டில் புதிய முயற்சியாக டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பொம்மை டிரைவர் அமர வைக்கப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறியதாவது:
''நாங்கள் விண்ணில் செலுத்தியுள்ள ராக்கெட் பால்கன் 9 ராக்கெட்டைப் போல் 3 மடங்கு பெரியதாகும். இந்த ராக்கெட் முயற்சி ஏறக்குறைய வெற்றி அடைந்துவிட்டது. இந்த ராக்கெட் மூலம் நாசாவின் விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியும். இந்த ராக்கெட்டின் முதல் பூஸ்டரை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்கு விண்ணில் செலுத்தும் செலவு குறையும்.
இந்த ராக்கெட்டில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் கார் விண்வெளியை அடைந்து, அடுத்த 6 மாதங்களில் செவ்வாய்கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்.''
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago