பாக். பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறையாக அமைச்சரானார் சீக்கியர்

By செய்திப்பிரிவு

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 3-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் சிங் அரோரா, நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிவினைக்குப் பிறகுபஞ்சாபில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் சீக்கியர் என்ற பெருமை அரோராவுக்கு கிடைத்துள்ளது.

முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீபின் அமைச்சரவையில் பஞ்சாப்மாகாணத்தின் சிறுபான்மையிருக்கான இலாகா அரோராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியைச் சேர்ந்த அரோரா, பிப்ரவரி 8-ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த கலில் தாஹிந்த சிந்துவுக்கும் பஞ்சாப் அமைச்சரவையில் மனித உரிமைகள் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE