சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள்.
சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் புழுதி பரக்கும் தூசுகளுக்கு இடையே அகப்பட்டு கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு. ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவற்றில் பெண் தன்னார்வலர்கலும் அடக்கம்.
ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் பெரும்பாலனவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள் ஆவர்.
இந்த நூற்றாண்டின் நரகம் என்று சித்தரிக்கப்படும் சிரியாவின் சர்வதேச சமூகத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் தினமும் 100 குண்டுகள்வரை அப்பாவி பொதுமக்களை நோக்கி போடப்படுகின்றன.
அவ்வாறு குண்டு வீசப்படும் பகுதிகளை நோக்கி தலையில் வெள்ளை கவசத்தை அணிந்து கொண்டு தங்கள் குடும்பத்திடமிருந்து விடை பெற்று செல்லும் இந்த வீரர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட உயிர்களை சரிந்த கட்டிடங்களிலிருந்து மீட்கின்றனர்.
உணவு, தண்ணீரையும் பொருட்ப்படுத்தாது தங்கள் மக்களை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று போர்க்கள பகுதியை நோக்கி செல்லும் இந்த ஹீரோக்களை குறி வைக்கவும் சிரிய அரசுப் படைகள் தயங்குவதில்லை.
இதுவரை போர் நடைபெறும் இடங்களிலிருந்து சுமார் 99,220 உயிர்களை காப்பாற்றியுள்ளனர் வைட் ஹெல்மெட் அமைப்பினர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மீட்புப் பணிகள் மட்டுமில்லாது வானிலிருந்து கட்டிடங்களை நோக்கி குண்டுகள் விழும்போது எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியையும் இவர்கள் சிரிய மக்களுக்கு அளிக்கிறார்கள்.
மேலும் சிரிய போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை சமூக வலைதளங்களில் The White Helmets பதிவிட்டு வருகிறார்கள்.
சிரியாவில் நடக்கும் தாக்குதல் குறித்து வைட் ஹெல்பேட் தொண்டு நிறுவனத்தில் தலைவர் ரைத் அல் சலாம் கூறும்போது, “சிரிய மக்கள் ஒவ்வொரு நாளும் புதியவகை ஆயுதங்களால் கொல்லப்படுகிறார்கள் அவற்றில் மோசமானது வானிலிருந்து விழும் பீப்பாய் குண்டுகள். நாங்கள் இங்கு இறுதியாக வாழ்வை காப்பாற்ற இருக்கிறோம். மனிதத்தை காப்பாற்ற இருக்கிறோம்” என்றார்.
சிரியாவில் 2014 முதல் இந்த இந்த ரத்த போர் நடந்து வருகிறது. இது அனைத்து சர்வதேச நாடுகளுக்கு தெரிந்தும் அமைதி காக்கிறார்கள் தொடர்ந்து கொலைகளை அனுமதித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்தே இந்த ஹீரோக்கள் ஏதோவித அபரிமிதமான நம்பிக்கையுடன் உலகின் ஆபத்தமான இடத்தில் அமைதியை நிலைநாட்ட ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago