இளவரசி கேத் மிடில்டன் எங்கே? - பிரிட்டன் அரச குடும்பத்தில் எழுந்த புதிய பிரச்சினை!

By செய்திப்பிரிவு

வேல்ஸ்: பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன் தம்பதி. இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவரது அரசப் பணிகளை இளவரசர் வில்லியமே கவனித்து வருகிறார். இதனிடையே, வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. சர்ச்சைகளின் உச்சமாக இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

இந்த பரபரப்பு எங்கே இருந்து கிளம்பியது என்றால், ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கென்சிங்டன் அரண்மனை ஒரு சில வாரங்கள் முன் செய்தி வெளியிட்டது.

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தியில், "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் ஈஸ்டர் பண்டிகை வரை (மார்ச் 31 வரை) அரச கடமைகளை செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அரச கடமைகளை செய்வதில் இருந்து விலகியுள்ளார்" என்று சொல்லப்பட்டது. கென்சிங்டன் அரண்மனை நிலவரத்தை சொன்னபிறகும் என்ன பிரச்சினை என்கிறீர்களா... அதுதான் பிரச்சினையே என்கிறார்கள் இங்கிலாந்து மக்கள்.

அரசக் குடும்பத்தை சேராத கேத், இளவரசர் வில்லியமை காதலித்து திருமணம் செய்து இளவரசியானார். இதனால் பிரிட்டன் அரசக் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களை காட்டிலும் பொதுமக்கள் உடன் நெருக்கம் காண்பிக்க கூடியவர் கேத். சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறி அதிரவைத்துள்ளார் ஸ்பானிஷ் செய்தியாளர் கான்சா காலேஜா என்பவர்.

"கேத்தின் உடல்நிலை அரண்மனை வெளியிட்ட தகவல்களை விட மோசமாக உள்ளது. அவர் ஆபத்தில் இருக்கிறார். அறுவைசிகிச்சைக்கு பிறகான உடல்ரீதியான சிக்கல் காரணமாக கேத் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன" என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

செய்தியாளர் கான்சாவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள கென்சிங்டன் அரண்மனை, "இந்த தகவல் கேலிக்குரியது. இளவரசி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார்" என்று கூறியுள்ளது. அரண்மனை மறுத்தபின்பும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், பிரிட்டன் அரசக் குடும்பத்திலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவர் என அறியப்படுகிறார் கேத் மிடில்டன்.

அப்படிபட்டவரின் உடல்நிலை மோசமானது என்றால், அவரது ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படாதது ஏன் என்பதே இங்கிலாந்து பொதுமக்களின் கேள்வி. சிகிச்சைக்காக அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தபோதும் சரி, சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பியதாக சொல்லப்பட்டபோதும் சரி கேத் மிடில்டன் குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

"மூன்று குழந்தைகளுக்கு தாயான கேத், பிரசவத்துக்கு பின், குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியே ஒரு சூப்பர்மாடலைப் போல போஸ் கொடுத்த ஒரு பெண்மணி. அவர் தனது முகத்தை வெளியில் காண்பிக்காமல், சிகிச்சை எடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட அப்பதிவு வைரலாகி ஆறு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதில் பலரும் கேத் மிடில்டன் காணவில்லை எனப் பதிவிட்டு வருவதால், கென்சிங்டன் அரண்மனை புதிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

26 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்