வடகொரியா உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது: கிம்

By ஏஎஃப்பி

வடகொரியா உலகில் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் இன்று (வியாழக்கிழமை) அந் நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முன்பாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

கிம் II சதுக்கத்தின் மூன் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சு பேசினார்.

ராணுவ அணிவகுப்பில் கிம் கூறியதாவது:

''நாம் உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாக வடகொரியா மாறியுள்ளது. உலகம் தரம் வாய்ந்த ராணுவத்தை நாம் கொண்டுள்ளோம்'' என்று கூறினார்.

வடகொரியா ராணுவத்தின் 70-வது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த ரானுவ அணிவகுப்பு நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஏவுகணைகள் அணிவகுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்