மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இந்திய ராணுவத்தின் உதவி தேவை என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமத் நசீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக கூறி மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தை தற்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் நேற்றிரவு அறிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முகமது நசீத் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி ஏற்றார். அதன்பிறகு, நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலை சதி உட்பட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின், உடல்நலக் குறைபாட்டை காரணம் காட்டி மாலத்தீவை விட்டு வெளியேறினார் நசீத். லண்டனில் சில காலம் தங்கியிருந்த நசீத், தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், நசீத் உட்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''9 பேரையும் விடுவிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்'' என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பினர். இதனால் அதிபர் யாமீனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். மேலும், உத்தரவைத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் உத்தரவிட்டார். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து அதிபர் யாமீனைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது கைது செய்யவோ உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது.நேற்றிரவு திடீரென மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இந்திய ராணுவம் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முகமத் நசீத் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆதரவாளர்கள் 9 பேரை விடுதலை செய்ய இந்திய ராணுவம் உதவ வேண்டும். அத்துடன் அமெரிக்க இதேபோல் அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காண, இந்தியா உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago