குரங்கு எடுத்த "செல்ஃபி": யாருக்குச் சொந்தம் காப்புரிமை?

By செய்திப்பிரிவு

யார் யாரெல்லாமோ தங்களைத் தாங்களே செல்ஃபி எடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களை அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தோனேசி யாவில் இருக்கும் ஒரு குரங்கிற்கும் செல்ஃபி எடுக்கும் ஆசை தொற்றிக் கொண்டது.

அந்தக் குரங்கை செல்ஃபி எடுத்த பெருமை டேவிட் ஸ்லேட்டரின் கேமராவுக்கே சாரும். பிரிட்டா னியாவைச் சேர்ந்த டேவிட் ஸ்லேட்டர் இயற்கைக் காட்சி களைப் படமெடுப்பதில் வல்லவர். கடந்த 2011ம் ஆண்டு இவர் இந்தோனேசியா வனத்தில் உள்ள கருங்குரங்கு ஒன்றை படமெடுக்கச் சென்றார்.

அப்போது அவரின் கேமராவைப் பிடுங்கிய கருங்குரங்கு, தன்னைத் தானே பல செல்ஃபிக் களை எடுத்துக் கொண்டது. அதில் ஒரு படங்கள் அருமையாக இருந்தன அவற்றை சில மென்பொருட்களின் உதவி யுடன் மேலும் அழகாக்கினார் டேவிட். அவரின் அந்தப் படங்களை விக்கிமீடியா தனது பொதுத் தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிமீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் டேவிட்.

ஆனால் விக்கிமீடியாவோ இந்தப் புகைப்படம் குரங்கு எடுத்தது. அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது. எங்கள் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றது. ‘ஒரு புகைப்படம் எடுப்பதற் காக சுமார் 7,000 யூரோக்கள் (சுமார் ரூ.5 லட்சம்) செலவழித்திருக்கி றேன். நான் எடுக்கும் ஒவ்வொரு 10,000 படங்களில் ஒரு படம் என்னை வாழ வைக்கிறது. அப்படி ஒரு படம்தான் அந்தப் புகைப் படம். இந்தப் படத்துக்காக ஒரு வருடம் செலவழித் திருக்கிறேன்' என்கிறார் டேவிட்.

இந்தப் பிரச்னைக்கு காப்புரிமை பொருந்தாது. காரணம், ஒரு புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை பெற முடியும். வெறுமனே குரங்கிடம் கேமராவைத் தந்து விட்டு அது எடுத்துக்கொண்ட படங்களுக்கு ஒருவர் காப்புரிமை பெற முடியாது.காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்புக்குத் தரப்படும் வெகுமதி அல்ல. அவரை மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுதல்தான். இதை டேவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்கி றார்கள் காப்புரிமை வல்லுநர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்