அமெரிக்காவின் தென் கரோலினாவில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ரயில்வேதுறை அதிகாரிகள் தரப்பு, "நியூயார்க்கிலிருந்து மியாமி மாகாணம் செல்லும் ரயில் பாதையில் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரயிலில் இருந்த இரு ஊழியர்கள் பலியாகினர்.
பயணிகளில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகள் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகாலை வேளையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இந்த விபத்து நடந்துள்ளது'' என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதில் பயணம் செய்த எரிக் லர்கின் கூறும்போது, "நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்"என்றார்.
விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago