சிரியாவில் 5 மணி நேர போர் நிறுத்தம்: புதின் உத்தரவு

By ஏபி

சிரியாவில் தினமும் ஐந்து மணி நேர போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 5 மணி நேர போர் நிறுத்தத்துக்கான அறிவிப்பை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கி ஷியோகூ திங்கட்கிழமை அறிவித்தார்.

இது குறித்து செர்கி கூறியதாவது, ''5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. டமாஸ்கஸ் மற்றும் அதன் புறப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும். அதுமட்டுமில்லாது சிரிய மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு  மாற்று வழிகள் செய்து தரப்படும்'' என்றார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில் 5 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்