இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார். அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் தந்தை. அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்த சூழலில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

“நோய் கண்டறிதல் சோதனையின் மூலம் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். சிகிச்சை முறையில் பாசிட்டிவ் மனநிலையில் உள்ள மன்னர், விரைந்து பொது வாழ்வுக்கு திரும்புவார்.

ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்” என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்