மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், வங்கி வைப்புத் தொகை, அவரது ராணுவ ஓய்வூதியம் மற்றும் சொத்து விற்பனையின் வாயிலாககிடைத்த பணமும் அடங்கும்.
இதற்கு நேர்மாறாக, அமெரிக்க அதிபரின் ஓராண்டு வருமானமே 4 லட்சம் டாலராக உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2000-ம் ஆண்டு முதல்2 தசாப்தங்களாக ரஷ்ய அதிபராக புதின்கோலோச்சி வருகிறார். இந்நிலையில்,வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் புதின் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறுகையில், “புதினுக்கு 10 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 54.5 மில்லியன் ரூபிள் (6,06,000 டாலர்) சேமிப்பு உள்ளது. பழங்கால கார்களும் அவரிடம் உள்ளன.
மேலும், ரஷ்ய அதிபருக்கு மாஸ்கோவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு அப்பார்ட்மெண்ட் மற்றும் ஒரு கேரேஜும் உள்ளதுஎன தெரிவித்துள்ளது. பின்லாந்தையொட்டிய ரஷ்ய எல்லைக்கு அருகில் புதினுக்கு ரகசிய குடியிருப்பு ஒன்று உள்ளதாக மாஸ்கோ டைம்ஸ் ஆவணங் களை மேற்கோள்காட்டி கூறியுள்ளது.
ரஷ்ய அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, 71 வயதான புதின் 2036-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்கவழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago