ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சு வார்த்தையை விரும்புகிறோம்: தலிபான்கள்

By ராய்ட்டர்ஸ்

ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் கடந்த 17 வருடங்களில் அரசுக்கு எதிராக தாலிபன்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை இந்தத் தாக்குதல்களில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 31,000. இப்போது ஆண்டுக்கு 4,000 என்று சராசரியாக உயர்ந்துவருகிறது.

 ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படை, ஆண்டுக்கு 7,000 பேரை இழக்கிறது. 2001 முதல் 2014 வரையிலான காலத்தில் பன்னாட்டுப் படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கனில் நடைபெறும் உள் நாட்டுப் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

அதில்,"ஆப்கனில் 17 வருடங்களாக நடக்கும் போரை நிறுத்த நினைக்கிறோம். நாங்கள் ஆப்கனில் நடக்கும் உள் நாட்டுப் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம் ” என்றுப் கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில் தலிபன்கள் ஆப்கான் ஒட்டலில் நடத்த தாக்குதல் குறித்து எதும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தலிபான்களின் அறிக்கையை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நேட்டோ படை தளபதி ஒருவர் கூறும்போது. "தலிபன்களின் அறிக்கை ஆப்கானில் அமைதி ஏற்படுவதை காட்டவில்லை. ஆப்கானிஸ்தானில் அவர்களுடைய சமீபத்திய தாக்குதல்கள் இந்த அறிக்கையைவிட அமைதி பேச்சை நன்கு வெளிப்படுத்தின" என்றார்.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்களை வேரறுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்