ஈரான் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: ஈரான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பரில் ஈரானின்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-தும் என்றசன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ மூத்த தளபதி உட்பட 11 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக கடந்த 16-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், பஞ்ச்கூர் பகுதியில் ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாத முகாமை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, தனது நாட்டிலிருந்த ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான். அதோடு பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஈரானின் தென் கிழக்கு பகுதியில் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஈரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 50 கி.மீ. தொலைவு வரை ஊடுருவிய எங்களது போர் விமானங்கள், பலுசிஸ்தான் தீவிரவாதிகளின் 7 முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்றன.

ஈரான் வெளியுறவுத் துறை கூறும்போது, பாகிஸ்தான் தாக்குதலில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈரானில் செயல்படும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை, ஈரான் வெளியுறவுத் துறை நேற்று நேரில் வரவழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்