நியூயார்க்: அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்த அபாயகரமான சம்பவத்துக்கு போயிங் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.அது எங்களுடைய தவறு என்று அந்நிறுவனத்தின் சிஇஓ டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737- 9 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அண்டாரியோவுக்கு செல்லும் வழியில் அதன் கதவு ஒன்று நடுவானில் வெடித்துப் பறந்தது. இதனால் அந்த விமானம் அவசரமாக போர்ட்லேண்டில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போயிங் விமான நிறுவனத்தில் நடந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு கூட்டத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "எங்களின் தவறினை ஒப்புக்கொண்டு இந்தத் தலையாயப் பிரச்சினையை நாங்கள் அணுகப் போகிறோம். இதன் ஒவ்வொரு அடியிலும் வெளிப்படைத் தன்மை இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், என்டிஎஸ்பி மிகவும் சிறந்த ஒன்று அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் நம்புகிறேன். இதுகுறித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என டேவ் கூறியதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுக்கொண்ட டேவ், நிறுவனம் இரண்டு 737 மேக்ஸ் போயிங் விமான விபத்து வழக்குகளில் சிக்கித் தத்தளித்து வரும் நிலையில், அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய போக்குவத்து பாதுகாப்பு வாரியத்துடன் (என்டிஎஸ்பி) இணைந்து செயல்படபோவதாக தெரிவித்தார்.
» சவுதி அரேபியாவில் ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு
» தென்கொரியாவில் நாய் இறைச்சி வர்த்தகத்துக்கு தடை: புதிய மசோதா நிறைவேற்றம்
முன்னதாக, விமானத்தை ஆய்வு செய்த என்டிஎஸ்பி ஆய்வாளர்கள் விபத்துக்குள்ளான கதவு சரியாக பொறுத்தப்படாமல் இருக்கலாம் என்று கணித்திருந்தனர். விபத்துக்குள்ளான கதவு அவசர வெளியேற்றத்துக்காக வைக்கப்பட்டிருந்தது என்றாலும் விமான நிறுவனம் அதைப் பயன்படுத்தவில்லை.
இதனிடையே, அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள், ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போயிங் விமானங்களின் விரிவான ஆய்வு முறையினை இறுதி செய்வதற்கு அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருதாக செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது. மேலும், போயிங் நிறுவனம் திங்கள்கிழமை ஆரம்பகட்ட மதிப்பாய்வை வழங்கியது. அதற்கு அளிக்கப்பட்ட பதில்களைக் கொண்டு அவைத் திருத்தப்படுகின்றது. போயிங் நிறுவனம் திருத்தப்பட்ட மதிப்பாய்வை வழங்கியதும் எஃப்ஏஏ விரிவான ஆய்வினை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் தேவைகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் மற்றும் எஃப்ஏஏ-வுடன் தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago