கெர்மன்: ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம், ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் அவரது நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் இரண்டு முறை குண்டுகள் வெடித்தது.
» டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்று 13 வயது அமெரிக்க சிறுவன் சாதனை!
» இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்த சம்பவத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 170 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago