பலுசிஸ்தானில் 3 தாக்குதல்கள்: பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகிறது.

இந்நிலையில் பலுசிஸ்தானில் நோஷ்கி, துர்பத், புளேடா ஆகிய 3 இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஎல்ஏ போராளிகள் ஸ்னைபர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி நோஷ்கியின் பால்கானி, கேஷாங்கி பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சிப்பாய் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை, துர்பத் நகரின் ஆப்சிர் பகுதியிலும் டிசம்பர் 24-ம் தேதி மாலை புளேடாவில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது கையெறி குண்டுகள் வீசி பிஎல்ஏ தாக்குதல் நடத்தியது. 2 சிப்பாய்கள் பலத்த காயம் அடைந்தனர். சுதந்திர தாயகம் என்ற இலக்கை அடையும் வரை எங்களின் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்