காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் - 24 மணி நேரத்தில் 200 பேர் பலி

By செய்திப்பிரிவு

டெல் அவில்: காசா மீது இஸ்ரேல் ராணுவம் சராமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவுக்குள் நுழைத்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததுள்ளது இஸ்ரேல். அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசிதாக்குதல் நடத்தியுள்ளது. காசாவுக்குள் நுழைத்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது இஸ்ரேல். அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல உடல்கள் சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில் புதைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மத்திய காசாவில் உள்ள நுசிராட் முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீடு ஒன்றின் அடித்தளத்தில் உள்ள சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அல்-குத்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பாலஸ்தீனஊடகவியலாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் 106 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ் - இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. பாராக்ளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதுவரை இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் இதுவரை 21,507 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE