ஜேஎன்.1 வகை கோவிட் தொற்றும், ‘ஏமாற்றும்’ தன்மையும் - மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

By ஆர்.முத்துக்குமார்

நியூயார்க் / புதுடெல்லி: அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் ஜேஎன்.1 (JN.1) கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் மூவர் உயிரிழந்ததும் கவலைகளையும் அச்சங்களையும் அதிகரித்துள்ளது.

பொதுவாகவே குளிர்கால வானிலை, மக்களை காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் என்று முடக்கிப் போட்டுவிடும் நிலையில், பிற வைரஸ்கள் பரவுவதால் கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் கரோனா வைரஸான SARS-CoV-2, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸின் சமீபத்திய திரிபு வடிவமான ஜேஎன்.1 என்ற வைரஸ் மிகவும் அதிகம் பரவக் கூடியது என்று யேல் பல்கலைக்கழக மருத்துவ அறிக்கையும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவிக்கின்றன. குளிர் காலங்களில் ஜேஎன்.1 கரோனா வேரியன்ட் பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், யேல் பல்கலைக்கழக தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ஹெய்டி சபாட்டா கூறும்போது, “இந்த புதிய வேரியன்ட் பற்றி இன்னும் எங்களுக்கு மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை” என்றார். இதோடு பிற துணை உருமாற்ற வைரஸ்களும் சுழற்சியில் உள்ளன. டிசம்பரில் அமெரிக்காவில் ஹெச்வி.1 என்ற வைரஸ் பரவி வந்தது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 29% பேரை சோதித்தபோது இந்த வைரஸ் இருந்தது தெரியவந்தது. ஈஜி.5 என்ற இன்னொரு வேரியன்ட் உள்ளது. இது முதலிடத்தில் இருந்தது. இப்போது அது ஜேஎன்.1 வைரஸினால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ஜேஎன்.1 கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஆகவே, பொதுச் சுகாதாரத்துக்கு பேராபத்து இருப்பதாகத் தெரியவில்லை என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தாலும், எச்சரிக்கையுடன் இந்த வைரஸை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

யேல் பல்கலை. மருத்துவ நிபுணர் சபட்டா கூறும்போது, “சுவாச ஒத்திசைவு வைரஸ் [respiratory syncytial virus-RSV] மற்றும் காய்ச்சல் வைரஸ் இன்னமும் சுழற்சியில் உள்ளது என்பது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று நான் கூறுவேன். எந்த ஒரு புதிய உருமாற்றமடையும் வைரஸும், SARS-CoV-2 வைரஸ் இன்னும் உருவாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே, கரோனா இன்னமும் நம்முடன்தான் உள்ளது என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

ஜேஎன்.1 எங்கிருந்து வந்தது? - கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் ஜேஎன்.1 வைரஸ் இருப்பது தெரியவந்தது. பைரோலா என்று அழைக்கப்படும் BA.2.86 என்ற வைரஸுடன் ஜேஎன்.1 வைரஸ் நெருங்கிய உறவு கொண்டது. ஓமிக்ரான் வைரஸின் வம்சாவளியில் இந்த வைரஸ் வருகிறது. இந்த ஓமிக்ரான் தான் 2021-ல் அமெரிக்காவையே உலுக்கியது. இது பல வடிவங்கள் எடுத்துவிட்டது. இப்போது இந்த அசல் வடிவம் சுழற்சியில் இல்லை. BA.2.86 வேரியன்டுக்கும் ஜேஎன்.1 வேரியண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஜேஎன்.1 வைரஸ் அதன் ஸ்பைக் புரதத்தில் இன்னுமொரு உருமாற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் வைரஸின் மையமான தன்மைகளை மாற்றாது. ஆனால், முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதுதான் கவலையளிக்கும் ஓர் அம்சம், ‘இது உடலின் நோய்த் தடுப்பு, நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கூடுதலாக ஏமாற்றி தொற்றக் கூடியது’ என்பதே.

ஜேஎன்.1 வைரஸ் குறித்து எதையும் திட்டவட்டமாகச் சொல்வதற்கு இப்போதைக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றாலும், இது கடுமையான நோய் அல்லது முந்தைய வேரியன்ட்களுடன் தொடர்புடைய அறிகுறிகளை விட அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு கூற முடியவில்லை என்கிறது அமெரிக்க நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். ஆகவே, இதற்கான அறிகுறிகள் என்பது பொதுவான கரோனா அறிகுறிகளையே கொண்டிருக்கும். தீவிரத்தன்மை அந்தந்த தனிநபரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்து வேறுபடும். ஆனால், இது மற்ற கரோனா வேரியன்ட்களை விட நம் உடல் எதிர்ப்பாற்றலை சாமர்த்தியமாக ஏமாற்றித் தொற்றக்கூடியது என்பதே.

SARS-CoV-2, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் RSV ஆகிய 3 வைரஸ்களும் குளிர்காலத்தில் வரவே செய்யும். இதனை அமெரிக்க மருத்துவ உலகம் ‘டிரிபிள்டெமிக்’ (tripledemic) என்று அழைக்கின்றது. இப்போது இந்த வைரஸ்களுக்கு எதிரான கோவிட் வாக்சின்கள் புழக்கத்தில் உள்ளதால் பயப்பட வேண்டியதில்லை என்கின்றனர்.

ஆகவே சளி, காய்ச்சல், தொண்டைக் கட்டு, குளிர், மூக்குசளி கொட்டுதல், தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, மூச்சுவிடுதலில் சிரமம், ருசி மற்றும் வாசனை சக்தியை இழத்தல், வயிற்று உபாதை, லேசான வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவரை ஆலோசித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்