கிம் ஜோங் உன்னுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு தயார்: ட்ரம்ப்

By ஏஎஃப்பி

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் நேரடியாக பேசத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தை வடகொரிய தென்கொரிய பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்து, ப்யாங்யாங் அணுசக்தி ஏவுகணை பதட்டங்களுக்கு தீர்வு காணவும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் கருத்துகள் பெரும்பாலும் வட-கொரியா மற்றும் கிம் மீது வலுவிழந்த நிலையிலேயே உள்ளன. ப்யாங்யாங் நகரில் ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டபோது ஒரு போருக்கான பதட்டத்துடன்தான் அவரது பேச்சுகள் இருந்து வருகின்றன.

''எனக்கு எப்போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உண்டு'' என்று கேம்ப் டேவிட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர், ''நீங்கள் கிம்மிடம் தொலைபேசியில் பேசலாமே'' என கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''நிச்சயமாக நான் அதைச் செய்வேன். அவ்வாறு பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். எத்தகைய முன்நிபந்தனைகளும் இன்றி இதை செய்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனால் அவருடன் நேரடியாக பேசவே விரும்புகிறேன்.

வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக தமது அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த உடன்பட்டுள்ளன, இந்நிலையில் வடகொரிய ஒலிம்பிக் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்ததுபோல தென்கொரியாவில், எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் பியோங்யாங்கின் பங்கேற்பு என்பது விவாதங்களைக் கடந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒலிம்பிக்கிற்கு அப்பாலும் அந்த ஈடுபாட்டை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.. சரியான நேரத்தில், நாங்கள் ஈடுபடுவோம். அவர் ஏதாவது பேசிக்கொண்டிருப்பதிலிருந்து வெளியே வந்தால், அது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய காரியமாக இருக்கும்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்