அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 8.2 ரிக்டர் அளவுக்கு மிகச் சக்திவாய்ந்த பூகம்பம் இன்று ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவின் உள்பகுதியிலும் , கனடா நாட்டுக்கு அருகிலும் அமைந்திருப்பது அலாஸ்கா மாநிலமாகும். இந்த மாநிலத்தில் உள்ள தென்கிழக்கி்ல் உள்ள கோடியாக் நகரில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில், கடல்பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
அந்த நாட்டு நேரத்தின்படி, அதிகாலையில் 8.2 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு பதிவானது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அலாஸ்கா மாநிலம், கனடா நாட்டின் மேற்கு கடற்கரை ஆகிய பகுதிகளை எந்த நேரமும் மிக ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கலாம் என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகளான, கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டனின் மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அலாஸ்கா, கனடா, ஓரிகா, வாஷிங்டன் பகுதிகளில் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாகபாதுகாப்பான இடத்துக்கு செல்லும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அமெரி்க்க அவசரகால மேலாண்மை அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “ கடற்கரை ஓரங்களில் யாரேனும் தங்கி இருந்தால், உடனடியாக மிகவும் மேட்டுப்பகுதிக்கோ அல்லது மலைப்பகுதியிலோ பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடற்கரைப்பகுதிகளை நோக்கி எந்தநேரமும் ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக் கூடும். முதலில் வரும் அலை சிறியதாக இருக்கும், ஆனால், அதைத் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு வரும் அலைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago