எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் கோரமான முறையில் அமெரிக்கா தலையிடுகிறது என்று ஈரான் கடுமையாக சாடியுள்ளது.
ஈரானில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் அரசை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹமடன், இஸ்பாஹன், கெர்மன்ஷா ஆகிய நகரங்களில் போராட்டம் பரவியது. இதில் இப்போராட்டங்களில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை வன்முறைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில், ''ஈரான் அரசு தங்களது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது'' என்று பதிவிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்தப் பதிவுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கண்டனம் தெரிவித்ததுடன் ஈரான் மக்கள் மீது அனுதாபம் காட்ட ட்ரம்புக்கு உரிமை கிடையாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுக்கு ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் குஷ்ரோ கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, ''ஈரானின் உள்விவகாரங்களில் கோரமான முறையில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரின் ட்வீட்கள் ஈரானியர்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது. ஈரான் மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுகிறது'' என்று தெரிவித்க்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago