ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில் கூறும்போது, "ஈரான் மீது தடைகள் பற்றி மறுபரிசீலனை செய்வது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்றார்.
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணுஆயுத சோதனைகளை செய்ததாகவும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதாக குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
18 mins ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago