ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்: 14 பேர் பலி

By ஏஎஃப்பி

வடக்கு ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சந்தையில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட14 பேர் பலியாகினர். அதேபோல் பெகிம் மாவட்டத்தில் சவுதிப் படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

ஏமன் கிளர்ச்சியாளர்களை மையமாக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எங்களை நோக்கி முன்னேறினால் உங்கள் கடல் வழிப்பாதையைத் துண்டிப்போம் என்று சவுதிக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை மிரட்டல் விடுத்திருந்தனர். இந்த நிலையில் சவுதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்