சவுதியை குறிவைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலை சவுதி மீண்டும் முறியடித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா இன்று (புதன்கிழமை) தரப்பில் கூறும்போது, "சவுதியின் தெற்கு பகுதியில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் எங்களை தாக்க ஏவிய புதிய ஏவுகணையை எங்கள் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. இதற்கான ஆயுதங்களை ஈரான்தான் வழங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று சவுதி அரேபியவின் ஜிஸான் மாகாணத்துக்கு அப்பால் ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதனை சவுதி வான் படைகள் தகர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இதனை சவுதி உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் சவுதியை குறிவைத்து நடத்திய மூன்றவாது தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 4-ம் தேதி சவுதியின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
எனினும் இந்தத் தாக்குதலை சவுதி தகர்த்தது. இந்த நிலையில் மீண்டும் சவுதியின் ரியாத் நகரை குறிவைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாக சவுதி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago