வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கதேசத்தில் இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கதேசத்தில் நிலநடுக்கமும், இந்தியாவில் நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. எனினும், இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொல்கத்தா காவல்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், நில அதிர்வால் சேதம் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்