தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா

By ஏஎஃப்பி

தென்கொரியாவின் பேச்சு வார்த்தை அழைப்பை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடனான வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுவதற்கு தாமதமாவதைத் தொடர்ந்து தென்கொரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பைக் டே ஹுன் கூறும்போது, இந்தப் பேச்சு வார்த்தையில் குளிர்கால ஒலிம்பிக், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் இதர பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பேச்சு வார்த்தைக்கு வடகொரியா சம்மதம்

தென் கொரியாவின் இந்தப் பேச்சுப் வார்த்தை அழைப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.

வடகொரியா - தென்கொரியா இடையேயான சந்திப்பு அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை நிகழும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் இந்த திடீர் மாற்றம் அமெரிக்கா - தென்கொரியா இடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான நகர்வு என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்