39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

By செய்திப்பிரிவு

ரஃபா (காசா): இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதிதெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்தது.

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்த போர் நிறுத்தம் வழிவகுத்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஹமாஸ் 14 பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் 42 சிறைக் கைதிகளையும் விடுவிக்க உள்ளதாக நேற்று மாலையில் தகவல் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்