இந்த ஆட்டம் யாருக்காக…?

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

லக அரசியல் – விநோதமானது; மிகவும் சிக்கலானதும்கூட. பல்வேறு பிணக்குகள், பலநூறு கணக்குகள் – ஒன்றுக்கொன்று இறுகப் பின்னிப் பிணைந்து இருக்கிற களம் இது. இரு தினங்களுக்கு முன், வட கொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். உண்மையில், சர்வதேசப் பிரச்சினைகளில் எதுவுமே, ‘திடீர்’ என்று நிகழ்வது இல்லை. வார்த்தைப் போர் தீவிரம் அடைந்து கொண்டு வரும் வேளையில், பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா பேச என்ன காரணம்…? பார்ப்போம். அதற்கு முன்னதாக..

ஒரு நாடு, அணு ஆயுதம் வைத்து இருப்பதால், யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் 24-வது மண்டலக் கூட்டம், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 2017 ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்றது. இதில் வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணை சோதனை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப் பட்டது.

இந்த கூட்டத்தில் தென் சீனக் கடல்தான், முக்கிய விவாதப் பொருளாக இருந்திருக்க வேண்டும். அதனைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்தது – வட கொரியாவின் அணு ஆயுத சோதனை. இதைத்தான் சீனா விரும்பியது.

மண்டலம் முழுவதும் ஒருவித பதற்ற நிலை தொற்றிக் கொள்ள வேண்டும்; தென் சீனக் கடல் பகுதியில் தனது ஆக்கிரமிப்பு திட்டங்களுக்கான எதிர்ப்பை விஞ்சியதாக அது இருத்தல் வேண்டும். அப்படியே நடந்தும் விட்டது. ஒரு வித அச்சத்தை, பாதுகாப்பற்ற சூழலை ஆசிய மண்டலத்தில் உருவாக்குவதன் மூலம், தன்னை எதிர்க்கும் சிறிய நாடுகளின் கவனத்தைச் சிதறடிக்க முடியும் என்கிற சீனாவின் கணக்கு, கச்சிதமாக அரங்கேறியது.

ஆனாலும் தென் சீனக் கடல் பிரச்சினையை, ‘ஆசியன்’ அமைப்பு, அப்படியே விட்டுவிடவில்லை. இப்பகுதியில் பிற நாட்டு எல்லைகளின் மீது சீனா கோரும் உரிமைகள் கூட்டத்தில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன.

சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியாஉள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான தென் சீனக் கடல், ஓர் ஆண்டில், 3-5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு, வணிகப் பொருட்கள் பயணிக்கிற கடல் மார்க்கம். கடல் வளங்களும் பெட்ரோலியப் படிமங்களும் நிறைந்து இருக்கிற மண்டலம். இந்தப் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறது சீனா.

தென் சீனக் கடலின் டோங்ஷா, ஸீஷா, சோங்க்ஷா, நான்ஷா தீவுகளின் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. இதை எதிர்த்து நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தில் 2013-ல் பிலிப்பைன்ஸ் முறையிட்டது.

2016 ஜூலை 12 அன்று, மத்தியஸ்த நீதிமன்றம், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீவுகளின் மீது ‘வரலாற்று உரிமை’ எதுவும் சீனாவுக்கு இல்லை என்றும் கூறி விட்டது. இதற்கு அடுத்த நாள், 2016 ஜூலை 13, ‘ஆச்சரியமான’ ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட்டது சீனா!தொடரும்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்