டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் படி இரண்டாவது நாளன்று விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல். ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது ஹமாஸ். அதுவே தாமதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் ஆலோசகர் தாஹிர் அல்-நோநோ தெரிவித்துள்ளார். வடக்கு இஸ்ரேல் பகுதிக்கு வேண்டிய உதவிகளை இஸ்ரேல் விநியோகிக்காமல் உள்ளது என்றும், சிறையில் நீண்ட கால தண்டனையில் உள்ள கைதிகளை விடுவிக்க மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இஸ்ரேல்.
ஒப்பந்தத்தின் படி 200 லாரிகளில் உதவி பொருட்கள் காசாவுக்கு சென்றுள்ளதாகவும். அதில் 50 வடக்கு காசாவுக்கு சென்றடைந்து உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதர் நேரத்தில் வடக்கு காசாவுக்கு திரும்பி முயன்ற மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும். இதில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இஸ்ரேலியர்கள் மட்டுமல்லாது பிணைக் கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்க நாட்டு மக்களும் விடுவிக்கப்படலாம் என அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் நாளன்று சுமார் 24 பேரை விடுவித்தது ஹமாஸ். மேற்கொண்டு 14 பிணைக் கைதிகளை இரண்டாம் நாள் விடுவிக்கப்பட இருந்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago