ஈரானில் நடைபெறும் வன்முறை இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி, மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட் டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் வியாபித்து பரவி வருகிறது. இந் நிலையில் திங்கள்கிழமை இரவு பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்காரணமாக பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் 6-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் ஈரானுக்கு அளித்த செய்தியில், "ஈரான் அதன் அமைதி, உறுதிப்பாட்டை காக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி "இன்னும் சில தினங்களில் ஈரானில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் நடைபெறும் போராட்டத்துக்கு ஹசன் ரவ்ஹானியை ட்ரம்ப் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago