ட்ரம்ப்பை மீண்டும் சீண்டும் வடகொரியா

By ஏஎஃப்பி

ட்ரம்ப்பின் அணுஆயுத பொத்தான் மிரட்டல், நோய் பிடித்த நாயின் குரைச்சல் என்று வடகொரியா மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது.

புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ''வடகொரியா அணுஆயுத சோதனைகளை முழுமையாக நடத்திவிட்டது. அமெரிக்காவின் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பொத்தான் என் மேசை மீது எப்போதும் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தனது ட்விட்டர் பக்கத்தில், ''உணவுப் பொருளுக்குத் திண்டாடி வரும் வடகொரியாவுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கள். என்னிடமும் அணுஆயுத பொத்தான் இருக்கிறது. ஆனால், கிம்மிடம் இருப்பதை விட, என்னிடம் இருப்பது மிகப் பெரியது, சக்தி வாய்ந்தது. அந்தப் பொத்தான் நன்றாக வேலையும் செய்கிறது. இதை கிம்முக்கு சொல்லுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப்புக்கு வடகொரியா பதிலளித்துள்ளது. வடகொரிய அரசால் வெளியிடப்படும் செய்தித்தாள் ஒன்றில், "ட்ரம்ப் பேச்சுகள் பைத்தியக்காரத்தனமானவை, அவை ஒரு நோய் பிடித்த நாயினது குரைச்சல்'' என்று கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடும் சொற்களால் பரஸ்பரம் விமர்சித்து வந்தனர். இதில் திடீர் திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தார். இந்த நிலையில் ட்ரம்ப்பின் மீது இத்தகைய விமர்சனத்தை வடகொரியா கூறியுள்ளது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

40 mins ago

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்