‘வெள்
ளைஅறிக்கை' என் பது ஓர் அரசு வெளியிடும் அதிகாரபூர்வ அறிக்கைகளில் மிகவும் 'புனிதம்' ஆனது. காரணம், இது முழுக்க உண்மைகளை மட்டுமே கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை. இப்படி ஓர் அறிக்கையை சீன அரசு, தென் சீனக் கடல் பிரச்சினையில் வெளியிட்டது.
இதில் பல ஆச்சரியங்கள். அறிக்கையின் தலைப்பே திகைப்பு ஊட்டுகிறது. சற்றே நீளமானது - ‘தென் சீனக் கடலில் சீனா - பிலிப்பைன்ஸ் இடையி லான சச்சரவை, பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்கிற தனது நிலைப்பாட்டை, சீனா தொடர்ந்து பின்பற்றுகிறது’. சீனாவின் ‘தன்மை’க்கு இது மிகவும் வித்தியாச மானது.
இதே பிரச்சினையில் 2014-ல் வெளியிட்ட ‘நிலை அறிக்கை’, மிரட்டல் தொனியில் இருந்தது. பல உண்மைகளை காரசாரமாக முன் வைத்தது. எல்லைப் பிரச்சினையில் எப்போதும், எல்லாரோடும், ‘இது எங்களுக்கே சொந்தம்’ என்று ஆணித்தரமாக வாதாடுவதுதான் சீனாவின் ‘ஸ்டைல்’.
முதன்முறையாக, நாசூக்கான அணுகுமுறையைத் தாங்கி வந்தது வெள்ளை அறிக்கை. இதன் 131-வது ஷரத்தை படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. எல்லையைச் சுற்றியுள்ள தனது அண்டை நாட்டாருடனான உறவு பற்றி விவரிக்கிறது. ‘சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட நாளில் இருந்து, சமத்துவ உணர்வு மற்றும் பரஸ்பர புரிதல் அடிப்படையில், எல்லை உடன் படிக்கைகளை எட்டி இருக்கிறது; இதற்கேற்றவாறு, சீன எல்லைகளில் 90% மறுவரையறை செய்யப்பட்டது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனாவின் நாணயம், எல்லோரும் அறிந்த ஒன்று. ‘எதுவாக இருந்தாலும்’ எங்களுக்குள் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்பதுதான் இந்த அறிக்கையின் சாராம்சம். இதற்காக 142 குறிப்புகளுடன், நீதிமன்ற வாதம் போல பல வரலாற்று விவரங்களை முன் வைக்கிறது. இந்த அளவுக்கு சீனா ‘இறங்கி வர’ என்ன காரணம்...? பசிபிக் பெருங்கடல் வரை தனது ஆதிக்கத்தை விரிவடையச் செய்வதே லட்சியம் என்று வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு வல்லரசு, ‘எல்லார்க்கும் நல்லவனாய்’ காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது...? வடகொரியா, அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக வளர்வதிலும், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாட்டுடன் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதிலும், சீனாவின் ராஜதந்திரம் நன்றாகவே வேலை செய்கிறது. எல்லா தருணங்களிலும் தன்னுடன் நின்று நியாயத்துக்காக போராடுகிற ஒரு நல்ல துணைவன், சீனாவுக்கு இன்றுவரை வாய்க்கவே இல்லை.
என்னதான் வடகொரியாவை தூக்கிப் பிடிக்கிற வேலையைச் செய்தாலும், சர்வதேச அரங்கில், தன் மீது படிந்துள்ள சந்தேகப் பார்வை மேலும் மேலும் படரவே செய்கிறது என்பதை சீனா நன்கு உணர்ந்து இருக்கிறது. போதாக்குறைக்கு, தனது பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நாடு, வலுவான சக்தியாக வளர்ந்து நிற்பதும் நிலைமையை சிக்கல் ஆக்கு கிறது. உண்மைதான்.
தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு கனவு நிறைவேறுவதற்கான சாத்தியம் இல்லை. அதற்கான பல காரணங்களில் ஒன்று.... ஜப்பான்! (தொடரும்)
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago