மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்: பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

By ஏபி

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி வந்த மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுமார் 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில் இன்னும் சில மேயான் எரிமலை வெடிக்கவுள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளன.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், "மேயான் எரிமலை கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வந்தது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது. மேயான் எரிமலை எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் என்பதால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறுவுறுத்தப்பட்டுள்ளன" கூறியுள்ளனர்.

 எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2006-ல்  இந்த எரிமலை வெடித்தது. ஆனால் அப்போது உயிரிழப்பு ஏற்பட வில்லை. அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசியது. இதில் தொடர்ந்து சீறிக் கொண்டிருந்த தீக்குழம்புகள் பொங்கி சிதறியதில் 1000 பேர் உயிரிழந்தனர்.

மேயான் எரிமலை 2,640 மீட்டர் உயரமுடையது. தலைநகர் மணி லாவில் இருந்து தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை அவ்வப்போது சீறி உயிர்களை பலி கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்