தென் கொரியா நாட்டில் மிரியாங் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இதனை அந்நாட்டு ஊடகமான யோன்ஹாப் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில் அடர்ந்த புகையால் சூழப்பட்ட மருத்துவமனையின் மேலே ஹெலிகாப்டர் வட்டமடிப்பது பதிவாகியுள்ளது. மருத்துவமனையை சுற்றிலும் பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மிரியாங் பகுதியின் தீயணைப்புப் படையின் தலைவர் சோய் மான் வூ கூறும்போது, "தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து திடீரென தீ பரவியதாக இரண்டு செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பணி நடந்து வருகிறது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக் கட்டிடத்துக்குள் வேறு யாரும் இல்லை" என்றார்.
விபத்து நடந்தபோது அந்த மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
கடந்த மாதம் ஒரு பிட்னஸ் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் 29 பேர் பலியாகினர். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்னதாகவே மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. முந்தைய விபத்தில், பிட்னஸ் கிளப்பில் போதிய அளவில் அவசர வழி இல்லை என்றும், சட்டவிரோத கார் பார்க்கிங் பகுதிகளால் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களால் சம்பவ இடத்தை எளிதில் நெருங்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
46 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago