இராக்கில் அமெரிக்க விமானங்கள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில், 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிரியாவில் மையமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், இராக்கில் ஊடுருவி மொசூல் உட்பட சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களை ஒடுக்க இராக் ராணுவமும், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப் படை வீரர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் உட்பட சில நகரங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. ஆனால், தவறுதலாக இலக்கு மாறி விமானங்கள் குண்டுகள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரி, 5 போலீஸார், ஒரு பெண் உட்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதை இராக் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இராக் அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஐன் அல் ஆசாத் விமான தளத்தின் அருகில் உள்ள யூப்ரேட்ஸ் பள்ளத்தாக்கு நகர் மீது அமெரிக்க விமானங்கள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் 8 பேர் இறந்தனர்’’ என்று தெரிவித்தனர்.-
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago