கொழும்பு: இலங்கையின் கொழும்புவில் இன்று (நவ.14) மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.2 ஆக அதிர்வு பதிவாகியுள்ளது. இன்று மதியம் 12.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து ஏதும் இல்லை என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப இதுவரை உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
மற்ற நாடுகளில் நில அதிர்வுகள்: இதற்கிடையில், திங்கள்கிழமை (நவம்பர் 13) தெற்கு சூடான் மற்றும் உகாண்டா இடையேயான எல்லையை சுற்றியுள்ள பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானிலும் திங்கள்கிழமை மாலை 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago