அமெரிக்காவில் ஷட்டவுன்: 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்

By ஏஎஃப்பி

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததையடுத்து, அங்கு “ஷட்டவுன்” அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

ஷட்டவுன் நிகழ்வு என்பது, அமெரிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

5 ஆண்டுக்களுக்கு பின்

செலவின மசோதாவை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன், அமெரிக்க அரசு நடத்திய சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்த ஷட்டவுன் தொடங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் ஷட்டவுன் தொடங்குகிறது.

அதிபர் டோனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முழுமை பெறும் நிலையில், இப்படிப்பட்ட நெருக்கடி அவர் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தோல்வி

அமெரிக்க அரசின் செலவின மசோதா குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அதிகம் இருக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிவிட்டாலும், ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் அதிகம் கொண்ட செனட் அவையில் ஒப்புதல் கிடைக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற அமெரிக்க அரசு சார்பில் நீண்டநேரம் சமரசப் பேச்சு நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது.

முடங்கும்

இந்த செலவின மசோதாவுக்கு செனட் அவை ஒப்புதல் அளிக்காததையடுத்து, அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முடங்கும். குறிப்பாக குடியேற்றத்துறை, தேசிய பூங்காகங்கள், அருங்காட்சியகம், உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் முடங்கும். இந்த ஷட்டவுன் நடைமுறைக்கு வந்தால், ஏறக்குறைய 2 லட்சம் பணியாளர்கள் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும்.

கோரிக்கை

அமெரிக்காவில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவரை பாதுகாக்க வேண்டும், நாட்டை விட்டு அனுப்ப முயற்சிக்க கூடாது என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், இதற்கு ஆளும் குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

தோற்கடிப்பு

இதையடுத்து செனட் அவையில் கொண்டு வரப்பட்ட செலவின மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 48 வாக்குகள் ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும் பதிவு செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இதனால், அமெரிக்க மத்திய அரசு அடுத்த கட்ட செலவுக்கு பணம் இல்லாத நிலையில் தவிக்கிறது. இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன் தொடர்ந்து ஆளும் குடியரசுக் கட்சியினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டு

இது குறித்து அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வெள்ளை மாளிகைக்கு வெளியே அளித்த பேட்டியில் கூறியதாவது-

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலுக்கு ஒருபோதும் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் பொறுப்பு இல்லை. அனைத்துக்கும் ஜனநாயகக் கட்சியினரே காரணம். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

நல்லதல்ல

கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஷட்டவுன் நிலை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தார், 1995ம் ஆண்டுக்கு பின் இது 4-வது முறையாக நிகழ்கிறது. இந்த நிகழ்வு குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் , “ நம் நாட்டின் தென்பகுதி எல்லைப்பகுதி ஆபத்தானதாக இருக்கும் போது, ஷட்டவுன் நடவடிக்கை நம்முடைய மிகப்பெரிய ராணுவத்துக்கும், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புக்கும் நல்லதாக இருக்காது. நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வரி குறைப்புக்கும் உதவாமல், ஜனாநாயகக் கட்சியினர் ஷட்டவுனுக்கு இட்டுச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்