வடகொரிய அதிபர் கிம்முடன் நல்ல உறவு முறையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, "நான் மக்களுடன் நல்ல உறவில் இருக்கிறேன். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனும் நல்ல உறவு முறையில் இருக்கிறேன். நான் கிம்முடன் பேசினேனா இல்லையா என்பது குறித்து இங்கு கருத்து கூற முடியாது" என்றார்.
வடகொரியாவின் அணுஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா- வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவியது. வடகொரியாவின் மீது அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது.
எனினும் இதனை சற்றும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தியது. இதன் காரணமாக வடகொரியாவை அச்சுறுத்தும் நோக்கத்தில் தென் கொரியாவுடன் இணைந்து கொரிய எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தென் கொரியா - வடகொரியா இடையே நடந்த பேச்சு வார்த்தைக்கு ட்ரம்ப் பெரிதும் உதவியதாக தென் கொரிய அதிபர் மூன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago