ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கிறதா சீனா?

By ராய்ட்டர்ஸ்

ஆப்கானிஸ்தானில் தங்கள் நாட்டு ராணுவ தளம் அமைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.

ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபெர்கானா நியூஸ் செய்தி நிறுவனம், சீனா வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கவுள்ளது என்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி அமெரிக்க, சீனா ஊடகங்களிலும் வெளியானது. இந்த நிலையில் இந்தச் செய்தியை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "சீனா - ஆப்கானிஸ்தான் இடையே வழக்கமான உறவுதான் உள்ளது. பிற நாடுகளைப் போல சீனாவும் ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாத எதிர்ப்புக்கு ஆதாரவளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சீன ராணுவ தளம் அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி அடிப்படையற்றது” என்றார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் சீன ராணுவ வாகனங்கள் வலம் வருவதாக வெளியான செய்தியையும் சீனா மறுத்தது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக சீனா பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுடனும் இணைந்து அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்