நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "நைஜீரியாவில் தென்கிழக்கு பகுதியிலுள்ள டிஃபா நகரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். நைஜீரியாவின் டிஃபா நகரம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோ ஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
போகோ தீவிரவாதிகள் கடந்த வாரத்தில் நைஜீரியாவின் குடிமக்கள் சிலரைக் கடத்திக் கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது.
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
43 mins ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago