காசா பகுதியில் இதுவரை 8,525 பேர் இறப்பு: இஸ்ரேல் தாக்குதலில் 7 பிணைக் கைதிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பிணைக் கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில்இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ம்தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தரை வழியாக புகுந்து தாக்கு தல் நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பகுதியில் இருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர் களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதுதவிர ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர்.இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதில்,இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,500 பேரும் காசா பகுதியைச் சேர்ந்த சுமார் 8,525 பேரும் உயிரிழந் துள்ளனர். இதுவரை பிணைக் கைதிகளில் 2 அமெரிக்கர்கள் உட்பட 4 பேரை மட்டும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரரை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், காசா பகுதியில் உள்ள ஜபலியா அகதிகள்முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 வெளிநாட்டினர் உட்பட 7 பிணைக் கைதிகள்உயிரிழந்தனர் என ஹமாஸ்அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடக்கு பகுதி யில் தரைவழியாக முன்னேறிச் செல்கிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 11 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில் இஸ்ரேல் ராணுவம் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளது. அதேநேரம் சில உயிர்களை இழந் துள்ளோம். எங்களுடைய ஒவ் வொரு வீரரும் முக்கியம் என எங்களுக்கு தெரியும். எனினும் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்” என்றார்.

இதனிடையே, கத்தார் நாட்டின் சமரச முயற்சி காரணமாக வெளி நாட்டினர் உட்பட படுகாயமடைந்த பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE