“பொதுமக்களை முன்னிறுத்துகின்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள்” - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்களை முன்னிறுத்தி வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி இருந்தனர். வான் வழியாகவும், தரை வழியாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் இயங்கி வரும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை நவோர் கிலன் தெரிவித்துள்ளார்.

“ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை முன்னிறுத்தி வருகின்றனர். வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேறுமாறு நாங்கள் மக்களிடம் தெரிவித்தோம். ஆனால், அதை செய்ய விடாமல் அவர்களை மிரட்டி வருகின்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள். சாலைகளையும் அவர்கள் மறித்துள்ளனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எல்லோரும் மக்களுக்கு உதவ விரும்புகின்றனர். ஆனால், அது அவ்வளவு எளிதான காரணம் அல்ல.

நாங்களும் அதை தான் சொல்லி வருகிறோம். அதனால் தான் காசா நகருக்குள் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளோம்” என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE