சிரியாவில் நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும்: ரஷ்யா, ஈரானுக்கு துருக்கி வலியுறுத்தல்

By ஏஎஃப்பி

ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவில் நடக்கும் வன்முறை தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அனடோலு செய்தி நிறுவனத்திடன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவுலுட் கேவுசோகுலு இன்று (புதன்கிழமை) கூறும்போது, "ஈரானும், ரஷ்யாவும் அவர்களது கடமைகளை புரிவதற்கு நேரம் வந்துவிட்டது. சிரிய அரசு இட்லிப் மாகாணத்தில் நடத்தும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிரியாவில் நடக்கும் வன்முறைகள் இந்த இரு நாடுகளின் உதவி இல்லாமல் ஏற்படாது''என்று கூறியுள்ளார்.

திங்கட்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 23 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய அரசு நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறர்கள்

இதுவரை சிரியாவில் நடந்த தாக்குதல்களுக்கு  3,40,000 பேர்  பலியாகியுள்ளனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்